தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் திறப்பு விழா, அடிக்கட்டு நாட்டு விழாக்களில் கலந்து கொண்டதுடன் மாணவ, மாணவியர் மற்றும் ஏழை, எளிய மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கினார்

0
253

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (25.2.2020), காலை, தனது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வார்டு-69, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள திக்காகுளம் சலவைக் கூடத்தில் தண்ணீர் தொட்டியுடன் கூடிய சலவை மேடை, ஓய்வறையுடன் கூடிய சமையல் அறை கட்டும் பணிக்காக அடிக்கல் நாட்டினார். வார்டு.68ல் உள்ள திரு.வி.க.நகர் விளையாட்டு மைதானம் அருகில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை பார்வையிட்டதுடன், திரு.வி.க.நகர் பல்லவன் சாலையில் உள்ள ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில்  மாநகராட்சி மூலதன நிதியில் மேம்படுத்தப்பட்ட பெட் மருத்துவமனையை திறந்து வைத்தார். வார்டு-65ல் உள்ள கணேஷ் நகர், துணை மின்நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை பார்வையிட்டார். வார்டு-67ல் உள்ள ஜி.கே.எம்.காலனி 24ஏ-வது தெருவில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவில் குளம் மேம்படுத்தும் பணியை துவக்கி வைத்தார். அத்துடன், வார்டு-66ல் உள்ள ஜவஹர் நகர் அலுவலகத்தில், 17 பேருக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி, புத்தக பை, தண்ணீர் பாட்டில், நோட்டு புத்தகம், ஜாமெண்ட்ரி பாக்ஸூம் – 11 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி, புத்தக பை, பேனா, தண்ணீர் பாட்டிலும் – 4 பேருக்கு மடிக் கணினியும் – 3 பேருக்கு திருமண உதவியும் – 21 பேருக்கு தையல் இயந்திரமும் – 15 பேருக்கு மருத்துவ உதவியும் – 5 பேருக்கு நான்கு சக்கர தள்ளு வண்டியும் – 5 பேருக்கு மீன்பாடி வண்டியும் – ஒருவருக்கு மூன்று சக்கர மோட்டார் பொருத்திய வாகனமும் – ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளும் – 2 பேருக்கு இஸ்திரி பெட்டியும் – 123 பேருக்கு மூக்கு கண்ணாடி, புத்தாடையும் என மொத்தம் 208 மாணவ, மாணவியர் மற்றும் ஏழை, எளிய, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்விபோது முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., வடசென்னை தொகுதி கழக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராச்சாமி, எம்.பி., திரு.வி.க.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப.தாயகம்கவி, எம்.எல்.ஏ., கொளத்தூர் பகுதிச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here