தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை, ஓட்டேரியில் கையெழுத்து இயக்கத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது

0
300

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (8.2.2020), சென்னை கிழக்கு மாவட்டம், ஓட்டேரி, பவானி எல்லை அம்மன் கோவில் பகுதியில் சிறுபான்மையினர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் இழைக்கப்பட்ட துரோகத்தை அறிவாயுதமான கையெழுத்து இயக்கத்தால் வீழ்த்திடும் நிகழ்வின் நிறைவு நாள் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தனிமனித ராப் பாடல் மூலமாக பிரச்சாரம் செய்து வரும் இளைஞர் அறிவு மற்றும் கானா பாடல்களில் புகழ் பெற்ற பாலா ஆகியோர் பாடல்களுடன் துவங்கியது. அதன் பின்னர், திரு.வி.க.நகர் பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் கழகத் தலைவர் அவர்கள் மக்களைச் சந்தித்து கையெழுத்து இயக்கத்திற்கான படிவத்தில் கையொப்பம் பெற்றார்.

மத்திய சென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன், சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., வடசென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராச்சாமி, திரு.வி.க.நகர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் ப.தாயகம்கவி, எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள்  ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here