தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ட்விட்டர் மற்றும் முகநூல் பதிவுகள்”

0
374

இன்று (09-12-2019) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவுகளின் விவரம் பின்வருமாறு:

இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்களுக்கு, அவர்களுடைய பிறந்தநாளான இன்று, என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் மதச்சார்பின்மையையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் காப்பதில், அவர்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சி முக்கிய மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பாற்றியுள்ளது. அவர்களின் பொதுவாழ்வுப் பயணம், மேலும் பல்லாண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்.

இந்திய விளையாட்டுத் துறையின் மகுடத்தில் புதுப்புது வைரங்களைப் பதித்து மின்னிடச் செய்வதில் தமிழக வீரர் – வீராங்கனையரின் பங்கு மகத்தானது.

நேபாளத்தில் நடைபெற்ற 13-வது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில், வாலிபால் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடிய இறுதிப் போட்டியில், இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

இந்திய வாலிபால் அணியின் தலைவராக ஆடிய, ஜெரோம் வினித் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் – கறம்பக்குடி தாலுகா – கோட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது, தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கக் கூடியதாகும்.

ஜெரோம் வினித் அவர்களின் தாத்தா, ஒரு மொழிப்போர்த் தியாகி என்பது, தமிழுணர்வு கொண்ட நம் அனைவரையும் சிலிர்ப்படையச் செய்கிறது.

ஆடுகளமாக இருந்தாலும், போராட்டக் களமாக இருந்தாலும் அர்ப்பணிப்புடன் பங்கேற்கும் பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவரான, தங்கத் தமிழர் ஜெரோம் வினித் அவர்களுக்கும், அவர் தலைமையில் ஆடிய இந்திய வாலிபால் அணியினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் பல வெற்றிப் பதக்கங்கள் உங்கள் வசமாகட்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here