திருவேற்காடு பகுதியில் வீட்டில் நுழைந்து தங்கநகைகளை திருடிய நபர் கைது. 5 1/4 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

0
264

சென்னை, திருவேற்காடு, தேவிநகர், முதல் தெரு, எண்.29 என்ற முகவரியில் கலைச்செல்வி, வ/25, க/பெ.ராஜசேகரன், என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று (01.11.2019) மாலை சுமார் 5.30 மணியளவில் வீட்டை தாழ்பாள் போட்டு அருகிலுள்ள கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, யாரோ இவரது வீட்டினுள் நுழைந்து, பீரோவிலிருந்த 5 1/4 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார். இது குறித்து கலைச்செல்வி T-5 திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
T-5 திருவேற்காடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர், மேலும் சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி பாண்டி, வ/27, த/பெ.கணேசன், எண்.29 ஏ, ஸ்ரீதேவி நகர், திருவேற்காடு என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 1/4 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட குற்றவாளி பாண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here