திருமங்கலம் அருகே 15 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வாலிபர் கைது.

0
423

சென்னை, திருமங்கலம் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 30.3.2019 அன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அப்பகுதியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் கோகுல் என்பவர் மேற்படி சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தகாத முறையில் நடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் W-8 AWPS திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்படி கோகுல் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் சென்னையிலுள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், மேற்படி சிறுமியிடம் அறிமுகமான கோகுல் சம்பவத்தன்று (30.3.2019) சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தகாத முறையில் நடந்துள்ளது தெரியவந்தது.
அதன்பேரில், W-8 திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் POCSO Act-2012 (Protection of Children from Sexual Offences) சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து, 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி தகாத முறையில் நடந்து கொண்ட கோகுல், வ/20, சித்தாத்தூர் கிராமம், திருவண்ணாமலை மாவட்டம் என்பவரை நேற்று (01.10.2019) கைது செய்தனர்.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட கோகுல், நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here