திருப்பூர் மாவட்ட எஸ்பி திஷா மித்தல் செயின் பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்த நபர்களை விரைந்து கைது செய்த போலீசாருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்

0
48

திருப்பூர் மாவட்டத்தில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை விரைந்து கைது செய்யவும், கைது செய்யப்பட்டவர்களை உரிய விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை பெற்றுத் தரவும் கொரோனா காலகட்டத்தில் போலீசார் அயராது உழைத்து வருகின்றனர். செயின் பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்த நபர்கள் விரைந்து கைது செய்யப்பட்டனர். இந்த வாரத்தில் இரண்டு வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது .இந்த வழக்குகளில் சிறப்பு சிறப்பாக பணியாற்றி தண்டனை பெற்றுத்தந்த பெருமாநல்லூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அவிநாசி இன்ஸ்பெக்டர் பிரேமா உதவி ஆய்வாளர்கள் தனபால் மீனாட்சி சுந்தரம் தலைமை காவலர் அம்பேத்கர் உள்பட   போலீசாருக்கு திருப்பூர் மாவட்ட எஸ்பி திஷா மித்தல் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here