திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் எதிர் எதிரே வேகமாக வந்த இருசக்கரவாகனங்கள் மோதி விபத்து! ஒருவர் பலி மூவர் படுகாயம்!! விபத்தில் சிக்கியவர்கள் போதை பொருள் கடத்தல் கும்பலா என போலீசார் விசாரணை

0
46

திருப்பூர் மாவட்டத்தை அடுத்த பல்லடம் தாராபுரம் சாலையில் இரவு இரு சக்கர வாகனங்கள்  ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தில் இருந்து தாராபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் வேகமாக சென்றுகொணிருந்தனர். அப்போது எதிரே பல்லடம் நோக்கி இரண்டு பேருடன்  வந்த இருசக்கரவாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நான்கு பேரையும் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நான்கு பேரில் ஒருவர் உயிரிழந்தது மருத்துவர்களின் பரிசோதனையில் தெரியவந்தது. மேலும் படுகாயம் அடைந்த மூவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருசக்கரவாகனத்தில் பிரஸ் ஸ்டிக்கருடன்  இருந்த வாகனத்தில் இருந்து   போதை பொருட்களை போலீசார் கைபற்றினர். மேலும் விபத்துக்குள்ளானவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தில்.சிக்கியவர்கள் போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here