திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று வெளி மாநிலங்களிள் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவிய முதல்வர்களுக்கு நன்றி.

0
197

இன்று (31-03-2020) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், மகாராஷ்டிரா மாநிலத்தில் உணவும் இருப்பிடமும் இல்லாமல் சிக்கித் தவிக்கும் 120 வியாபாரிகளுக்கு உதவ வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்ரே அவர்களுக்கும், கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் கங்கவதி பகுதிகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவ வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் திரு. எடியூரப்பா அவர்களுக்கும், தெலங்கானா மாநிலத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவ வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் திரு. கே. சி. சந்திரசேகர் ராவ் அவர்களுக்கும் தனது ட்விட்டர் பதிவின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து, தெலங்கானாவில் சிக்கித் தவித்தவர்களுக்கு தலா 12 கிலோ அரிசி மற்றும் தலா 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டதாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் செயல் தலைவரும் அம்மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழில், வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. கே.டி.ராமாராவ் அவர்கள் தனது ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்தார்.

அதேபோல், மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்ரே அவர்களும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு முறையான உணவு மற்றும் இருப்பிட வசதிகள் அளிக்கப்பட்டு, அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் தனது ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்தார்.

ட்விட்டர் மூலமாக வைக்கப்பட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிய திரு. உத்தவ் தாக்ரே அவர்களுக்கும், திரு. கே.டி.ராமாராவ் அவர்களுக்கும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here