தலைமறைவாகயிருந்த பழைய குற்றவாளியை கைது செய்த தலைமைக்காவலர் மற்றும் ஊர்க்காவல் படை வீரரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்

0
406

K -8 அரும்பாக்கம் காவல் நிலைய நுண்ணறிவுப்பிரிவு-2 தலைமைக்காவலர் திரு.S.ராம்திலக், (த.கா.27558) ஊர்க்காவல் படை வீரர் திரு.S.ஹரிகிருஷ்ணன் (HG 1838) ஆகிய இருவரும் பணிமுடித்து நேற்று (08.01.2020) இரவு சுமார் 10.15 மணியளவில் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்த போது, நெற்குன்றம், வெங்காயமண்டி அருகே நின்று கொண்டிருந்த பழைய குற்றவாளி சகாயம் (எ) தேவசகாயத்தை அடையாளம் கண்டு அருகில் சென்று அவரை பிடிக்க முயன்ற போது, அவர் தப்பி ஒட முயற்சி செய்துள்ளார். சுதாரித்து கொண்ட தலைமைக்காவலர் திரு.S.ராம்திலக் (தா.கா.27558) மற்றும் ஊர்க்காவல் படை வீரர் திரு.S,ஹரிகிருஷ்ணன் (HG 1838) ஆகிய இருவரும் மேற்படி சகாயம் (எ) தேவசகாயத்தை மடக்கி பிடித்து சோதனை செய்த போது ஒரு கத்தி மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அதன் பேரில் பிடிபட்ட சகாயம் (எ) தேவசகாயத்தை F -5 சூளைமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

F-5 சூளைமேடு காவல் நிலைய போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட சகாயம் (எ) தேவசகாயம் வ/32, த/பெ.ஜான்சன், பெரும்பாக்கம், சென்னை என்பவர் மீது சேத்துப்பட்டு காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது கொலை , கொலை முயற்சி மற்றும் கஞ்சா வழக்குகள் உள்பட 13 வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேலும் குற்றவாளி சகாயம் (எ) தேவசகாயம் சூளைமேடு காவல் நிலையத்தில் உள்ள கொலை வழக்கின் நீதிமன்ற விசாரணைக்கு சரிவர ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால், நீதிமன்றத்தால் பிடிஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரிடமிருந்து 1 கத்தி மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

தலைமறைவாகயிருந்த பழைய குற்றவாளியை கைது செய்த கே-8 அரும்பாக்கம் நுண்ணறிவுப் பிரிவு-2 தலைமைக்காவலர் திரு.S.ராம்திலக் (த.கா.27558), ஊர்க்காவல் படை வீரர் திரு.S.ஹரிகிருஷ்ணன் (HG 1838) ஆகிய இருவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று (9.1.2020) நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here