தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவனத்தலைவரான திரு.சு.ஆ. பொன்னுச்சாமி அவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் அணியின் மாநிலச் செயளராக நியமிப்பு

0
502

தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவரான திரு.சு.ஆ. பொன்னுச்சாமி
அவர்கள், தமிழக பால் முகவர்களின் உாிமைசார் போராட்டங்களை முன்னெடுத்து அவர்களின் நலம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு உாிமைகுரலாக ஒலித்து வந்தார்.

அதே வேளையில், நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீது பெரும் நம்பிக்கையும் ஆதரவும்
கொண்டு, தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகளிலெல்லாம் நமக்கு ஆதரவாகவும்,
சார்பாகவும் அறிக்கைகள் பிரச்சாரங்கள் மூலமும் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அதன் அடுத்த கட்டமாக தன்னை நமது கட்சியில் எனது முன்னிலையில் இணைத்துக் கொண்டுள்ளார்.

திரு.சு.ஆ.பொன்னுச்சாமி அவர்களின் தொடர் செயற்பாட்டையும் நமது கட்சிக்கு ஆதரவான அவாின் நிலைப்பாட்டினியையும் கவனத்தில் கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் நல அணியின் மாநிலச் செயலாளராக நியமித்துள்ளேன்.

திரு.சு.ஆ.பொன்னுச்சாமி அவர்களுக்கு கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கி பணியாற்றிட வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here