தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில நிர்வாகிகள் 08.02.2020 அன்று நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

0
278

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில நிருவாகிகள் 08.02.2020 அன்று நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தங்களின் மேலான கவனத்திற்கு சமர்ப்பித்து கீழ்காணும் கோரிக்கைகளை நிறைவேற்றித்தரும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றோம்.

1.   (SSA & RMSA) ஒருங்கிணைந்த கல்வி பள்ளிக்கல்வித்துறையில் கணக்கர்,கணக்கர் மேலாளர், கல்வி மேலாண்மை முகமை ,கணினி விவர பதிவேட்டாளர் போன்ற அனைத்து பணிகளுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மூலம் நாடு முழுவதும் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டார்கள்.

அதில்,  தமிழ்நாட்டில் 2012,2014,2015 ஆகிய ஆண்டுகளில் முறையே 1512 தொகுப்பூதியப் பணியாளர்கள் ரூ.8,400 சம்பளத்தில் நியமிக்கப்பட்டார்கள். நாடு முழுவதும் நியமிக்கப்பட்ட தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைத் திட்ட ஒப்புதல் வாரியம் மூலம் தற்போது 20,000 முதல் 25,000 வரை தொகுப்பூதியம்   உயர்த்தி வழங்கி மற்ற மாநில பணியாளார்கள் பயனடைந்து வருகிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை ஒதுக்கியத் தொகை பெறப்பட்டும் கடந்த நான்காண்டுகளாக மாநிலத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது. சில மாநிலங்களில் அதே மாதிரி பணிபுரியும் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, மாநிலத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்கிய ஊதியத்தினை  நிலுவைத்தொகையோடு வழங்கிடவும், பணிநிரந்தரம் செய்திட ஆவனசெய்யும்படி வேண்டுகின்றேன்.

2.  கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களை தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் சேர்ப்பது ஆணை . ஆனால் தனியார் பள்ளிகள் முறையாக செயல்படுத்துகிறதா என்பதை அரசு கண்காணிக்கவேண்டும். ஆனால் ஒவ்வொரு வருடமும் அரசே இணையதள வழியாக விண்ணப்பம் பெற்று வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அரசே தேர்வு செய்துதருவதோடு சுமார் 100 கோடிக்கும் மேலாக அப்பள்ளிகளுக்கு கட்டணமாக வழங்குவதினை கைவிடவேண்டும்

3. 2011 ஆம் ஆண்டு அரசு நிதி உதவிப்பெறும் பள்ளியில் பணிநியமனம் செய்யப்பட்ட 1500 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து விலக்கு அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தினை காப்பாற்றிட ஆவனசெய்திடவும். 

 4. அரசுப்பள்ளியில் ஆசிரியராக சேர்ந்து தங்களின் கல்வித் தரத்தை உயர்த்திக்கொள்ள மன்அனுமதியின்றி உயர்கல்வி பயின்ற சுமார் 4,500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பின்னேற்பு

5. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் ஆதி திராவிடர் பள்ளிகள்,மாநகராட்சிப்பள்ளிகள், கள்ளர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகைப் பள்ளிகளையும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவந்து அரசின் சலுகைகள் அனைவருக்கும் கிடைத்திட ஆவனசெய்திடவும்.

ஐந்து கோரிக்கைகளை ஆவனசெய்து நிறைவேற்றித் தரும்படி. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here