தமிழிசைக் கருவியான தவில் இசையில் வல்லுநராக விளங்கிய கலைமாமணி திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி மறைவு – தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

0
102

தமிழிசைக் கருவியான தவில் இசையில் வல்லுநராக விளங்கிய கலைமாமணி திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தி அறிந்து வேதனையடைகிறேன். இசைத்துறையில் தனக்கானத் தனி இடத்தைப் பெற்றவர் கலியமூர்த்தி. என் திருமண விழாவில் கோடையிடி 
போல அவரது இசை முழங்கியது இன்னமும் செவிகளில் ஒலிக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞர்  அவர்கள் முதல்வராக இருந்தபோது, கலியமூர்த்தியின் 
இசைத்திறமையைப் பாராட்டும் வகையில் கலைமாமணி விருது அளித்து சிறப்பித்தார். திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது இறப்பினால் துயர்ப்படும் குடும்பத்தினர், நண்பர்கள், இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் என் ஆறுதலை உரித்தாக்குகிறேன்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here