டி.பி சத்திரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட மாவா புகையிலைப்பொருளை விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது. 10 கிலோ ஜர்தா, 9.5 கிலோ சீவல் பாக்கு, 1 கிலோ மாவா, 1 மிக்ஸி மற்றும் ரூ.7,000/- பறிமுதல்

0
20

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, மு-6 டி.பி சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (5.05.2019) டி.பி சத்திரம் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்த போது ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் டி.பி.சத்திரம், ஆட்டோ நிறுத்தம் அருகே கண்காணித்த போது அங்கு மூவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் மேற்படி இடத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த 1.ராபர்ட், வ/48, த/பெ.பிரான்சிஸ், 19 வது தெரு, டி.பி.சத்திரம் 2.ராமகிருஷ்ணன், வ/67, த/பெ.பெருமாள், டி.பி.சத்திரம் 3.பிரபாகரன், வ/26, த/பெ.விநாயகம் மூர்த்தி, எண்.8, டாக்டர் அன்சாரி தெரு, புளியந்தோப்பு ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கிலோ ஜர்தா, 1 கிலோ மாவா, 9.5 கிலோ சீவல்பாக்கு,1 மிக்ஸி மற்றும் ரொக்கம் ரூ.7,000/- பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மேற்படி மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here