சேலையூர் மற்றும் சங்கர் நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது. 1,150 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்

0
702

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து கண்காணித்தல் மற்றும் அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்பேரில், S-15 சேலையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (30.08.2019) மதியம் அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்த போது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சேலையூர், அகரம் தெற்கு மெயின் ரோடு, லட்சுமி அம்மாள் கல்லூரி அருகில் கண்காணித்தபோது, அங்கு ஒருவர் TN11 AJ 3866 என்ற பதிவெண் கொண்ட ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்து, கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
அதன் பேரில் மேற்படி இடத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கர்ணா, வ/20, த/பெ.கார்மேகம், எண்.4, ராஜீவ்காந்தி தெரு, பாரதி நகர், சேலையூர், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சா மற்றும் மேற்படி டியோ இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல, S-6 சங்கர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் இன்று (31.8.2019) காலை அனகாபுத்தூர், சுடுகாடு அருகில் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.முகமது கைப், வ/20, த/பெ.முகமது கயாஸ், எண்.8, அய்யப்பா நகர், பம்மல், 2.குமார், வ/19, த/பெ.பாபு, எண்.18, பாரதியார் நகர், பம்மல், 3.ராஜேந்திரன், வ/25, த/பெ.சுந்தரம், எண்.25/31, தாய் மூகாம்பிகா நகர் 2வது தெரு, அனகாபுத்தூர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 900 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here