சேலையூரில் சிக்கன் கடையில் பணம் திருடிகொண்டு, கடையை தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பிய முன்னாள் ஊழியர் சிசிடிவி கேமரா உதவியால் கைது

0
109

சென்னை, சேலையூர், வேளச்சேரி மெயின் ரோடு, எண்.185 என்ற முகவரியில் சுரேஷ், வ/40, த/பெ.அர்ஜுனன் என்பவர் சிக்கன், மட்டன் கடை நடத்தி வருகிறார். கடந்த 30.3.2019 இரவு சுரேஷ் மேற்படி கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில், நள்ளிரவு யாரோ மர்ம நபர் மேற்படி சிக்கன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கடையிலிருந்த ரூ.2,500/-ஐ திருடிக் கொண்டு கடையை தீயிட்டு கொளுத்தவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து கடையின் உரிமையாளர் சுரேஷ் S-15 சேலையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சேலையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தனர். மேலும், அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் ஒரு நபர் மேற்படி கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பின்னர் வெளியே வந்து கடையை தீவைத்து கொளுத்திவிட்டு சென்றது தெரியவந்தது. அதன்பேரில், மேற்படி உருவத்தை வைத்து விசாரணை செய்ததில், அந்த நபர் மேற்படி சுரேஷின் கடையில் வேலை செய்து வந்த நபர் எனத் தெரியவந்தது.
அதன்பேரில், சேலையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மேற்படி குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட முன்னாள் ஊழியரான சுரேஷ், வ/30, த/பெ.ராஜு, முனீஸ்வரன் கோயில் தெரு, சிறுதாம்பூர் கிராமம், மதுராந்தகம் என்பவரை நேற்று (22.4.2019) கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றவாளி சுரேஷ் மேற்படி சுரேஷின் சிக்கன் கடையில் சுமார் 7 வருடங்களாக வேலை செய்து கடந்த 20 நாட்களுக்கு முன்னர் வேலையிலிருந்து நின்றுவிட்டதும், சமீபத்தில் கடை உரிமையாளரிடம் பணம் கேட்டபோது, தர மறுத்ததால், ஊழியர் சுரேஷ் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட ஊழியர் சுரேஷ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here