செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காவலன் SOS மொபைல் செயலியை பயன்படுத்துவது பற்றி மாணவிகளுக்கு விளக்கம்

0
709

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று (06.12.2019) மாலை பெண்கள் பாதுகாப்பிற்காக கிண்டி, செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற காவலன் SOS செயலி அறிமுக விளக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காவலன் SOS செயலி செயல்படும் விதம் பற்றியும், அதனை பெண்கள் தரவிறக்கம் செய்து அவசர காலங்களில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். மேலும் காவலன் SOS செயலி செயல்படும் விதம் அதன் பயன்கள் மற்றும் அதனை தரவிறக்கம் செய்வது பற்றிய வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவிகளுக்கு விநியோகம் செய்தார்.

இந்நிகழ்ச்சியில், தெற்கு கூடுதல் ஆணையாளர் திரு.பிரேம்ஆனந்த் சின்ஹா ,இ.கா.ப., தெற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி. சி.மகேஷ்வரி, இ.கா.ப., அடையார் துணை ஆணையாளர் திரு.பகலவன், இ.கா.ப, காவல் அதிகாரிகள், கல்லூரி முதல்வர் திருமதி. கலைவாணி, பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here