செம்மஞ்சேரியில் இரவு நேரங்களில் வீடு புகுந்து செல்போன்களை திருடிய 2 பேர் கைது- 2 செல்போன்கள் பறிமுதல்

0
355

சென்னை, சோழிங்கநல்லூர், பரமேஸ்வரர் 2வது தெருவில் வசித்து வரும் புவனேஸ்வர ராவ், வ/19, த/பெ.ராமமூர்த்தி என்பவர் கல்லூரியில் படித்து வருகிறார். புவனேஸ்வரராவ் கடந்த 27.8.2019 அன்று இரவு கதவை திறந்து வைத்து தூங்கிய பின்னர் மறுநாள் (28.8.2019) காலை எழுந்து பார்த்தபோது, அவர் வீட்டில்வைத்திருந்த Vivo மற்றும் Redme ஆகிய 2 செல்போன்களை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில், புவனேஸ்வர ராவ் இது தொடர்பாக J-10 செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்தும், புவனேஸ்வர ராவ் வீட்டினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை ஆய்வு செய்தும், மேற்படி வீட்டில் செல்போன்களை திருடிய ஜெயராஜ், வ/19, த/பெ.குமார், எண்.21, பரமேஸ்வர் நகர் 2வது தெரு,சோழிங்கநல்லூர், மற்றும் 17 வயது இளஞ்சிறார் ஆகிய 2 பேரை நேற்று (28.8.2019) கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் செல்போன்கள்-2 பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், கைது செய்யப்பட்ட ஜெயராஜ் மீது செம்மஞ்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் அதிகாலை நேரங்களில் புகுந்து செல்போன், லேப்டாப் மற்றும் பொருட்களை திருடியது தொடர்பாக J-10 செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 2 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயராஜ் சிறையிலும், இளஞ்சிறார் அரசு கூர்நோக்கு இல்லத்திலும் சேர்க்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here