சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் அண்ணாநகர் , அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

0
507

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் பெண்கள் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று காவலன் SOS செல்போன் செயலி குறித்தும், அது செயல்படும் விதம் குறித்தும், இச்செயலியின் பயன்பாடு குறித்து எடுத்துரைத்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் பயனாக பெண்கள் மற்றும் மாணவிகள் காவலன் SOS செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து, காவல்துறையின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று (11.12.2019) காலை அண்ணாநகர் , அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இச்செயலியின் பயன் மற்றும் பதிவிறக்கம் செய்வது குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் (Awareness Pamphlets) மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது. அதன்படி கல்லூரி மாணவிகள் காவலன் SOS செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் (வடக்கு) திரு.ஆர்.தினகரன், இ.கா.ப., மேற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.விஜயகுமாரி, இ.கா.ப, அண்ணாநகர் துணை ஆணையாளர் திரு. எம்.எஸ்.முத்துசாமி , இ.கா.ப, அம்பத்தூர் துணை ஆணையாளர் திரு.ஐ.ஈஸ்வரன், காவல் அதிகாரிகள், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here