சென்னை பெருநகர காவலின், தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடந்த 3 மாதங்களில் 156 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 174 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் கடந்த ஒரு மாதத்தில் 20 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

0
483

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சுற்றுக் காவல் ரோந்து அதிகரித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த மூன்று மாதங்களில் அதாவது செப்டம்பர் முதல் நவம்பர் வரை சென்னை பெருநகர காவலின் தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 156 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 174 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 70 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 72.8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்டோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 ம் ஆண்டு இதே காலண்டில் 124 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதுடன் 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த இண்டு வாரத்தில் மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் S-10 பள்ளிக்கரணை காவல் நிலைய சரகத்தில் 6 கிலோ கஞ்சாவும், ஜெ-4 கோட்டூர்புரம் காவல் நிலைய சரகத்தில் 15 கிலோ கஞ்சாவும், J-13 தரமணி காவல் நிலைய சரகத்தில் 5 கிலோ கஞ்சாவும், J-12 கானத்தூர் காவல் நிலைய சரகத்தில் 5 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காவல் கூடுதல் ஆணையாளர், இணை ஆணையாளர்கள் ஆகியோரின் தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டதன் மூலம் தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் கஞ்சா விற்பனை வெகுவாக கட்டுப்படுத்தபட்டுள்ளது. மேலும் கல்வி நிறுவனங்களை சுற்றி சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் அனைத்து காவல் மாவட்டத்திலும் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்டுள்ள போதை பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகம் செய்து வந்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here