சென்னை பெருநகரில் 2600 விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடு செய்ய அனுமதி. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்

0
911

வருகிற 02.9.2019 அன்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சென்னையில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் நிறுவி வழிபாடு செய்து பின்னர் கடலில் கரைக்க உள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படியும், தமிழக அரசு வகுத்துள்ள வழிக்காட்டு விதிமுறைகளின் படியும் சென்னை பெருநகர் முழுவதும் 2600 விநாயகர் சிலைகள் நிறுவி விழிபாடு நடத்த பல்வேறு அமைப்பை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவரகளின் உத்தரவுப்படி, 3 காவல் கூடுதல் ஆணையாளர்கள் தலைமையில், 6 இணை ஆணையாளர்கள், 12 துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உன மொத்தம் 10 ஆயிரம் போலீசார் சென்னை பெருநகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் படவுள்ளனர்.
விநாயகர் சிலைகள் நிறுவி வழிபாடுகள் முடிந்து பிறகு வருகின்ற 05.9.2019, 07.9.2019 மற்றும் 08.9.2019 ஆகிய 3 தினங்களில் அனுமதிகப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக சென்று கடலில் கரைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களான 1.ராமகிருஷ்ணா நகர், எண்ணூர், 2.பாப்புலர் எடைமேடை பின்புறம், திருவொற்றியூர், 3.Unit of Universal Carborundum பின்புறம், திருவொற்றியூர், 4.காசிமேடு மீன்பிடி துறைமுகம், 5.சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம், 6.பல்கலை நகர், நீலாங்கரை ஆகிய 6 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களில், சென்னை பெருநகர காவல்துறையினர் மூலம் கிரேன்கள், உயிர் காக்கும் குழுக்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது. மேலும், விநாயகர் சிலைகள் அனுமதிக்கப்பட்ட ஊர்வல பாதைகளிலும், சிலை கரைக்கும் இடங்களிலும் காவல்துறையினர் மூலம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here