சென்னை பெருநகரில் போக்குவரத்து காவல் தொடர்பான குறைகளுக்கு தீர்வு காண பெருநகர காவல் ஆணையாளர் பொதுமக்களை நேரில் சந்திக்கும் “மாபெரும் மக்கள் குறைதீர்ப்பு முகாம்”

0
887

சென்னை பெருநகரில் போக்குவரத்து காவல் தொடர்பான தங்களுக்கு (பொதுமக்கள்) உள்ள குறைகளுக்கு தீர்வு காண ஏதுவாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. A.K.விசுவநாதன், IPS., அவர்களின் அறிவுருத்தலின் படி மற்றும் சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையாளர் (போக்குவரத்து) திரு.A.அருண், IPS., அவர்களின் வழிகாட்டுதலின் படியும், காவல் உயர் அதிகாரிகள், பொதுமக்களை நேரில் சந்திக்கும் “மாபெரும் மக்கள் குறைதீர்ப்பு முகாம்” நடைபெற உள்ளது.
இந்த மாபெரும் மக்கள் குறைதீர்ப்பு முகாமில் போக்குவரத்து காவல் இணை ஆணையாளர்கள் கீழ்கண்ட தேதி மற்றும் இடங்களில் பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து துரித நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
வ. எண் போக்குவரத்து மாவட்டம் முகாம் நடைபெறும் நாள் முகாம் நடைபெறும் இடம் தலைமை

  1. போக்குவரத்து மேற்கு மாவட்டம் (அம்பத்தூர், புளியந்தோப்பு, அண்ணாநகர் மாவட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள்;) 14.09.2019 காலை 11.00 மணி S.S.Mahal 100 அடி சாலை, திருமங்கலம், சென்னை-40 போக்குவரத்து காவல் இணை ஆணையாளர் (வடக்கு) மற்றும் போக்குவரத்து துணை ஆணையாளர் (மேற்கு)
  2. போக்குவரத்து கிழக்கு மாவட்டம் (மயிலாப்பூர், கீழ்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி மாவட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள்) 14.09.2019 காலை 11.00 மணி இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், ருக்மணி லட்சுமிபதி சாலை எழும்பூர். சென்னை -8 போக்குவரத்து காவல் இணை ஆணையாளர் (தெற்கு) மற்றும் போக்குவரத்து துணை ஆணையாளர் (கிழக்கு)
    பத்திரிக்கை மற்றும் ஊடக துறையினர் இந்த தகவலை அனைத்து பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் எனவும், அனைத்து பொது மக்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குறைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here