சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மருத்துவ அணி மாநில நிர்வாகிகள் – மாவட்ட அமைப்பாளர்கள் கூட்ட தீர்மானங்கள்

0
412

மாநில நிர்வாகிகள் –  மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம்

தி.மு.க.  மருத்துவ அணி மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் கூட்டம்,  இன்று  (1-2- 2020) சனிக்கிழமை  காலை 10.30 மணி அளவில்,  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்,  
தி.மு.க. மருத்துவ அணித் தலைவர் டாக்டர் 
பூங்கோதை ஆலடிஅருணா, எம்.எல்.ஏ., தலைமையிலும் – மாநில மருத்துவ அணி துணைத் தலைவர்கள் டாக்டர் செந்தில்நாதன், டாக்டர் பி.சரவணன், எம்.எல்.ஏ., மற்றும் மாநில மருத்துவ மணி துணைச் செயலாளர்கள் டாக்டர் ஆர்.கோகுல் கிருபாசங்கர், டாக்டர் வல்லபன், டாக்டர் ப.சேகர், டாக்டர் 
ஆர்.ராஜேஸ்வரி மோகன்காந்தி, டாக்டர் ஜெ.
அருண், டாக்டர் ஆர்.டி.அரசு, எம்.எல்.ஏ., ஆகியோர்முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  மாவட்ட அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தீர்மானம் – 1

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றி பெற்றிட பாடுபட்ட கழகத் தலைவர் அவர்களுக்கு  பாராட்டு

நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மாவட்ட மற்றும் ஓன்றிய கவுன்சில் தேர்தலில், ஆளும் அ.தி.மு.க.வின் அராஜகத்தையும் மீறி, பெரும்பான்மையான மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றிட  பாடுபட்ட கழகத் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுதல்களை  இக்கூட்டம் தெரிவித்து கொள்கிறது.

தீர்மானம்  -2

‘மருத்துவ அணி’ என பெயர் மாற்றிட உறுதுணையாக இருந்த லைவர் அவர்களுக்கு நன்றி!

10-11-2019  அன்று நடைப்பெற்ற பொதுக்குழு  கூட்டத்தில் மாநில மருத்துவர் அணி என அழைக்கப்பட்ட அணியை” மாநில மருத்துவ அணியாக “பெயர் மாற்றம் செய்ய உறுதுணையாக இருந்த 
கழகத்தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் – 3

இந்திய குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்த பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு: 14-னை சாவுமணி அடித்து மதரீதியாக பிளவுப்படுத்த “திருத்தப்பட்ட இந்திய குடியுரிமை சட்ட மசோதாவை அமுல்படுத்திய பாசிச பா.ஜ.க., மேலும், நாடாளுமன்றத்தில் 11 வாக்குகளை அளித்து அதன் மூலம் சட்டமாக்கிட உதவிய முதுகெலும்பில்லாத அ.தி.மு.க.வையும்  இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது .

தீர்மானம் – 4

கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி தமிழக முழுவதும் நடைபெற உள்ள “கையெழுத்து இயக்கத்தில்”  மருத்துவ அணியினர் பெருமளவில் பங்கேற்க வேண்டும்.

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் 24.1.2020 அன்று நடைபெற்ற ‘அனைத்துக்கட்சி கூட்டத்தில்’ 2020 பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை “கையெழுத்து இயக்கம்” தமிழக முழுவதும் நடத்திட வேண்டுமென நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி, இக்கையெழுத்து இயக்கப் பணியில், மாநில மற்றும் மாவட்ட மருத்துவ அணி நிர்வாகிகள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்று அதிகளவில் மருத்துவ துறையில் பணிபுரிபவர்களிடம் கையொப்பங்களை பெற்று, அதனை கழகத் தலைவர் அவர்களிடம் ஒப்படைப்பது என இக்கூட்டம் ஏகமனதாக முடிவெடுத்துள்ளது .

தீர்மானம் – 5

கழகத் தலைவர் அவர்களின் பிறந்த நாள்!

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளினை யொட்டி, மிகப் பிரம்மாண்டமான “தொற்றா நோய்கள் விழிப்புணர்வு மாராத்தான் போட்டி”யை ஈரோடு தெற்கு மாவட்டம், ஈரோட்டி மாநகரத்தில் நடத்திட இக்கூட்டம் தீர்மானித்துள்ளது

தீர்மானம் – 6

2009ஆம் ஆண்டின் கழக ஆட்சியின் அரசாணைப்படி அகவிலை ஊதிய உயர்வு அளித்திடுக !

தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகள் – ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு கழக ஆட்சியான 2009ஆம் ஆண்டில், மாண்புமிகு முதல்வர் முத்தமிழறிஞர்  டாக்டர் கலைஞர் அவர்கள் வெளியிட்ட அரசாணைப்படி ‘அகவிலை ஊதிய உயர்வு” அளித்திட வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 7

திமுக குருதி கொடை செயலியை மேம்படுத்துதல்!

கடந்த ஆண்டு செப்டம்பரில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திருக்கரத்தால், “திமுக குருதி கொடை செயலி” துவக்கப்பட்டது. தற்போது 6,000க்கும் மேற்பட்ட குருதி கொடையாளர்கள் இச்செயலியில் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த செயலி வாயிலாக குருதி பெற்று பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 778. ஓவ்வொரு மாநில நிர்வாகியும், மாவட்ட அமைப்பாளர் அதிகளவு குருதி கொடையாளர்களை செயலியில் பதிவு செய்யதால்தான நோயாளிகளுக்கு குருதி எளிதில் கிடைத்திட வழிவகுக்கும். இதனை செயல்படுத்தும் விதமாக, மூன்று மாதங்களுக்குள் மாநில மருத்துவ அணி நிர்வாகிகள் – மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர்கள் எவர் ஒருவர், 10,000 குருதி  கொடையாளிகள் பதிவு செய்கின்றவர்களுக்கு, தி.மு.க. மருத்துவ அணியின் சார்பில்  கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திருக்கரத்தால் சிறப்பு பரிசு வழங்கிட என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here