சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி 1.பாபு (எ) டில்லிபாபு, வ/23, த/பெ.தேவா, எண்.16, சக்திவேல் நகர் 2வதுதெரு, புழல் என்பவர் மீது எம்-2 மாதவரம் பால் பாண்ணை காவல் நிலையத்திலும் 2.ரமேஷ்குமார், வ/41, த/பெ.எட்டியப்பன், எண்.18, கண்ணாபிரான் கோயில் தெரு, பல்லாவரம் என்பவர் மீது எஸ்-12 சிட்லப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி, குற்றவாளிகள் 02 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் மேற்படி குற்றவாளிகள் 02 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று (12.11.2019) உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி குற்றவாளிகள் 02 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் பாபு (எ) டில்லிபாபு என்பவர் மீது 4 வழிப்பறி வழக்குகள் உள்ளது. ரமேஷ்குமார் என்பவர் மீது சைக்கிள் திருடியது தொடர்பாக 8க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.