சென்னையில் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்ட 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

0
739

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்பேரில், 1.தணிகா (எ) தணிகாச்சலம், வ/35, த/பெ. பாளையம், எண்.505, மாரியம்மன் கோயில் தெரு, கன்னிகைப்பேர், ஊத்துக்கோட்டை தாலுகா, திருவள்ளூர் மாவட்டம் என்பவர் மீது M-4 செங்குன்றம் காவல் நிலையத்திலும் 2.சுபாஷ், வ/25, த/பெ.சுரேந்திர ராவ், எண்.100, முருகேஷ்பால்யா, பெங்களூர் என்பவர் மீது V-4 ராஜமங்கலம் காவல் நிலைய குற்றப்பிரிவிலும், 3. சார்லஸ் (எ) சார்லஸ்ராஜ், வ/23, த/பெ.சுரேஷ், எண்.2/4, தென்றல் நகர், பட்டாபிராம், சென்னை என்பவர் K-5 பெரவள்ளூர் காவல் நிலையத்திலும், 4.சபி பாஷா, வ/27, த/பெ.இப்ராகிம், எண்.39, எம்.ஆர்.நாயுடு 2வது தெரு, வில்லிவாக்கம், சென்னை என்பவர் மீது T-2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி, குற்றவாளிகள் 04 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் மேற்படி குற்றவாளிகள் 04 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று (04.10.2019) உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி குற்றவாளிகள் 04 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் குற்றவாளி தணிகா (எ) தணிகாச்சலம் மீது 6 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 18 வழக்குகள் உள்ளது. சுபாஷ் மீது செல்போன் பறிப்பு மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் உள்ளது. சார்லஸ் (எ) சார்லஸ்ராஜ் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. மேலும் இவர் ஏற்கனவே ஒரு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சபி பாஷா மீது செயின்பறிப்பு வழக்குகள் உள்ளது. மேலும் இவர் ஏற்கனவே ஒரு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here