சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு 3 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

0
806

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி 1.ஆனந்த் (எ) கோழிபாபு, வ/22, த/பெ.முருகன், எண்.17, ராஜீவ்காந்தி ரோடு, பெரியார் நகர், ஆழ்வார் திருநகர் 2.முருகன், வ/24, த/பெ.ராதாகிருஷ்ணன், எண்.12/168, 4வது குறுக்கு தெரு, புவனேஷ்வரி நகர், மேட்டுகுப்பம், கோயம்பேடு ஆகிய இருவர் மீது T-2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்திலும் 3.ஏழுமலை, வ/28, த/பெ.குப்பன், எண்.56, எம்.பி.எம். தெரு, வியாசர்பாடி என்பவர் மீது K-1 செம்பியம் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி, குற்றவாளிகள் 03 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் மேற்படி குற்றவாளிகள் 03 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி குற்றவாளிகள் 03 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் குற்றவாளி ஆனந்த் (எ) கோழிபாபு, முருகன் ஆகிய இருவர் மீது வழிப்பறி மற்றும் செயின்பறிப்பு வழக்குகள் உள்ளது. ஏழுமலை என்பவர் மீது கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here