சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

0
350

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக 1.சதீஷ் (எ) பல்லு சதீஷ், வ/26, த/பெ.கணேசன், எண்.10, 7வது தெரு, வள்ளல் பாரி நகர், பள்ளிக்கரணை என்பவர் மீது K-11 CMBT காவல் நிலையத்திலும் 2.மனோஜ்குமார் (எ) மனோரஞ்சன், 32, த/பெ.ராமகிருஷ்ணன், எண்.27, சி.பி ரோடு, ரயில்வேகாலனி, கொருக்குப்பேட்டை என்பவர் மீது P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்திலும் 3.சகாயம் (எ) தேவசகாயம்,வ/33, த/பெ.ஜான்சன், எண்.9 ஏ, அப்பாரராவ் கார்டன், ஷெனாய்நகர், சென்னை என்பவர் மீது F-5 சூளைமேடு காவல் நிலையத்திலும் 4.விஜி (எ) விஜயகுமார், வ/26, த/பெ.முனுசாமி, எண்.72, துலுக்கானம் தெரு, திருவொற்றியூர் என்பவர் மீது H-8 திருவொற்றியூர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி, குற்றவாளிகள் 4 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததன் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் மேற்படி 4 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று (31.01.2020) உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி குற்றவாளிகள் 4 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் சதீஷ் (எ) பல்லு சதீஷ் மீது கொலை மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளது. மனோஜ்குமார் (எ) மனோரஞ்சன் மற்றும் விஜி (எ) விஜயகுமார் மீது கஞ்சா தொடர்பாக பல வழக்குகள் உள்ள நிலையில, இருவரும் ஏற்கனவே ஒரு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சகாயம் (எ) தேவசகாயம் என்பவர் மீது 4 கொலை வழக்குகள் உட்பட 35 வழக்குகள் உள்ள நிலையில், இவர் ஏற்கனவே 3 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here