சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 6 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

0
65

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி 1.சரவணன் (எ) ஆர்ட்ஸ் சரவணன், வ/24, த/பெ.முருகன், எண்.58, ஜாகீர் உசேன் தெரு, எம்.ஜி.ஆர் நகர் என்பவர் மீது எஸ்-5 பல்லாவரம் காவல் நிலையத்திலும் 2.தினேஷ்குமார் (எ) தினேஷ், வ/23, த/பெ.குப்பன், எண்.416/2, கங்கன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை 3.கார்த்திக், வ/24, த/பெ.ரவி, எண்.115, கோபால் நகர், மணலி ரோடு, கொருக்குப்பேட்டை 4.முனியசாமி, வ/35, த/பெ.கருப்பன், எண்.56, அண்ணாநகர், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம் 5.தர்மிசந்த், வ/42, த/பெ.ஜோகாராம், எண்.10, இப்ராஹிம் தெரு, கொண்டித்தோப்பு என்பவர் மீது சி-2 யானைகவுனி காவல் நிலையத்திலும் 6.பிரபு (எ) நாட்டாமை பிரபு (எ) சிவதாசன், வ/26, த/பெ.ராமச்சந்திரன், எண்.8/7, துர்கா தேவி நகர், 5வது குறுக்குத் தெரு, தண்டையார்பேட்டை என்பவர் மீது எம்-1 மாதவரம் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி, குற்றவாளிகள் 6 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் மேற்படி குற்றவாளிகள் 6 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி குற்றவாளிகள் 6 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் குற்றவாளிகள் சரவணன் (எ) ஆர்ட்ஸ் சரவணன் மீது கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் உட்பட மொத்தம் 6 வழக்குகள் உள்ளது. தினேஷ்குமார் (எ) தினேஷ், கார்த்திக் ஆகிய இருவர் மீது 1 கொலை வழக்கு மற்றும் 1 கொலை முயற்சி வழக்கு உள்ளது. முனியசாமி என்பவர் மீது எம்-1 மாதவரம் காவல் நிலையத்தில், இளைஞரின் மர்ம உறுப்பை அறுத்து கொலை செய்த குற்றத்திற்காக கொலை வழக்கும், 1 கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தர்மிசந்த் என்பவர் மீது 6 வழிப்பறி வழக்குகள் உள்ளது. பிரபு (எ) நாட்டாமை பிரபு (எ) சிவதாசன் என்பவர் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட மொத்தம் 5 வழக்குகள் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here