சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 6 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது.

0
63

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி 1.பெருமாள் (எ) சடையாண்டி, வ/26, த/பெ.வேலு, எண்-2, பாலாஜி நகர், வடவள்ளி, கோயம்புத்தூர் மாவட்டம் 2.ஆனந்தன் (எ) கருப்பு ஆனந்தன், வ/24, த/பெ.போஸ், எண்.17 டி, அப்பர் நகர், திருவொற்றியூர் ஆகிய இருவர் மீது எம்-4 செங்குன்றம் காவல் நிலையத்திலும் 3.ரமேஷ் (எ) பி.டி.ரமேஷ், வ/33, த/பெ.பசுபதி, எண்.73, 10வது தெரு, அன்னை சிவகாமி நகர், எண்ணூர் என்பவர் மீது எம்-5 எண்ணூர் காவல் நிலையத்திலும் 4.ஆதில், வ/25, த/பெ. சராபூதின், எண்.12, நடராஜன்தெரு, பழைய வண்ணாரப்பேட்டை என்பவர் மீது சி-1 பூக்கடை காவல் நிலையத்திலும் 5.பிரபு கணேஷ், வ/26, த/பெ.விஜய்சங்கர், எண்.5, சுனாமிகுடியிருப்பு, பெரும்பாக்கம் என்பவர் மீது வி-3 ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்திலும், லோகேஷ், வ/23, த/பெ.ராஜேந்திரன், எண்.172 ஏ, அகரம் சௌத் மெயின்ரோடு, சேலையூர் என்பவர் மீது எஸ்-13 குரோம்பேட்டை காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி, குற்றவாளிகள் 6 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் மேற்படி குற்றவாளிகள் 6 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று (09.7.2019) உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி குற்றவாளிகள் 6 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றவாளிகள் பெருமாள் (எ) சடையாண்டி, ஆனந்தன், ரமேஷ், ஆதில் மற்றும் பிரபுகணேஷ் ஆகியோர் மீது வழிப்பறி மற்றும் வீடு புகுந்து திருடிய வழக்குகள் உள்ளது. இதில் ஆனந்தன் (எ) கருப்பு ஆனந்தன் மீது 20 வழக்குகளும், ரமேஷ் மீது ஒரு கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு உட்பட பல வழக்குகளும் உள்ள நிலையில் ஏற்கனவே ஒரு முறை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். லோகேஷ் மீது செல்போன் திருடியது தொடர்பாக சுமார் 6 வழக்குகள் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here