சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 19 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது

0
892

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி 1.ரஞ்சித்குமார், வ/42, த/பெ.வேதாச்சலம், எண்.47, திருநீர்மலை ரோடு, அற்புதம் நகர், கடப்பேரி, மேற்கு தாம்பரம், 2.சிட்டிபாபு, வ/36, த/பெ.வேதாச்சலம், எண்.47, அற்புதம் நகர், மேற்கு தாம்பரம், 3.ஜெயபாபு (எ) காக்கா முட்டை பாபு, வ/37, த/பெ.வேதாச்சலம், எண்.47, அற்புதம் நகர், கடப்பேரி, மேற்கு தாம்பரம், 4.அன்பழகன், வ/36, த/பெ.கணேசன், எண்.61, அற்புதம் நகர், கடப்பேரி, மேற்கு தாம்பரம், 5.அப்பு, வ/36, த/பெ.ராஜி, எண்.2/14, பஜனை கோயில் தெரு, கடப்பேரி, மேற்கு தாம்பரம், 6. ஏழுமலை, வ/31, த/பெ.கேசவன், எண்.60, கலங்கல் தெரு, அற்புதம் நகர், கடப்பேரி, மேற்கு தாம்பரம், 7.மணிகண்டன், வ/26, த/பெ.ரங்கநாதன், எண்.2, பஜனை கோயில் தெரு, கடப்பேரி, மேற்கு தாம்பரம், 8.பூபாலன், வ/42, த/பெ.கேசவன், எண்.25/60, கலங்கல் தெரு, மேற்கு தாம்பரம், ஆகிய 8 பேர் மீது S-11 தாம்பரம் காவல் நிலையத்திலும், 9.வெங்கட்ராமன், வ/29, த/பெ.நாமதேவன், எண்.34, பெருமாள் நகர் 3வது பிரதான சாலை, பழைய பல்லாவரம், 10.திலீப், வ/24, த/பெ.சங்கர், எண்.1ஏ, வேலுசாமி 2வது தெரு, எம்.கே.நகர், கீழ்கட்டளை ஆகிய 2 பேர் மீது S-5 பல்லாவரம் காவல்நிலையத்திலும், 11.டில்லி (எ) விஜயகுமார், வ/28, த/பெ.முனுசாமி, எண்.17, மங்களேரி, திருவான்மியூர், 12.தியாகராஜன், வ/26, த/பெ.பழனி, எண்.19, திருவீதியம்மன் கோயில் தெரு, திருவான்மியூர், ஆகிய 2 பேர் மீது J-6 திருவான்மியூர் காவல் நிலைய குற்றப்பிரிவிலும், 13.மரியதாஸ், வ/35, த/பெ.செல்வராஜ், எண்.10, அன்னை சிவகாமி நகர் 9வது தெரு, எண்ணூர், சென்னை, 14.நரேஷ் (எ) நரேஷ்குமார், வ/26, த/பெ.யேசு, எண்.10, 9வது தெரு, அன்னை சிவகாமி நகர், எண்ணூர் ஆகிய 2 பேர் மீது M-5 எண்ணூர் காவல் நிலையத்திலும், 15.தனசேகரன், வ/40, த/பெ.குப்புசாமி, எண்.69, நேரு தெரு, திருநகர், அனகாபுத்தூர், 16.விவேகானந்தன், வ/30, த/பெ.பழனிவேல், எண்.286, ரைஸ் மில் தெரு, திருவையாறு தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம் என்பவர் மீது K-11 CMBT காவல் நிலையத்திலும், 17.திவாகர், வ/21, த/பெ.தனசேகர், சந்திரா பிளாட், வில்லிவாக்கம் என்பவர் மீது T-8 முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்திலும், 18.கஜேந்திரன் (எ) கஜா, வ/28, த/பெ.நடராஜன், ஜீவா நகர், எடப்பாளையம், சென்னை-52 என்பவர் மீது M-4 செங்குன்றம் காவல் நிலையத்திலும், 19.விஷ்ணு அமர்நாத், வ/23, த/பெ.ஜெயச்சந்திரன், எண்.595, எம்.ஜி.ஆர். நகர், மணவாள நகர், திருவள்ளூர் மாவட்டம் என்பவர் மீது சென்னை சென்டிரல் இரயில்வே காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி, குற்றவாளிகள் 19 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் மேற்படி குற்றவாளிகள் 19 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று (29.8.2019) உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி குற்றவாளிகள் 19 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் குற்றவாளிகள் ரஞ்சித்குமார், சிட்டிபாபு, ஜெயபாபு (எ) காக்கா முட்டை பாபு, அன்பழகன், அப்பு, ஏழுமலை, மணிகண்டன், பூபாலன் ஆகிய 8 நபர்கள் மீது தாம்பரம் காவல் நிலையத்தில் இரட்டை கொலை வழக்கு உள்ளது. வெங்கட்ராமன் மீது பெண்கள் வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திலீப் மீது கொலை, கொலைமுயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளது. மேலும் இவர் ஏற்கனவே ஒரு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. டில்லி (எ) விஜயகுமார், தியாகராஜன் ஆகிய இருவர் மீது செயின்பறிப்பு மற்றும் கொலை வழக்குகள் உள்ளது. மரியதாஸ், நரேஷ் (எ) நரேஷ்குமார் ஆகிய இருவர் மீது எம்-5 எண்ணூர் காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு உள்ளது. தனசேகரன் என்பவர் மீது வழிப்பறி மற்றும் லாட்டரி வழக்கு உள்ளது. விவேகானந்தன் மீது கஞ்சா வழக்கு உள்ளது. திவாகர் மீது டி-8 முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்குகள் உள்ளது. கஜேந்திரன் (எ) கஜா மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளது. விஷ்ணு அமர்நாத் என்பவர் மீது சென்டிரல் ரயில்வே காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here