சென்னை, சூளைமேடு, ராதாகிருஷ்ணன் நகர், எண்.27 என்ற முகவரியில் வசித்து வரும் சீனிவாசன், வ/24, த/பெ.அன்பழகன் என்பவர் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 19.10.2018 அன்று சீனிவாசன் அவரது வீட்டினருகே சென்று கொண்டிருந்தபோது, குடிபோதையிலிருந்த அப்பகுதியைச் சேர்ந்த 2 பேர் சீனிவாசனை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். பின்னர் சீனிவாசன் அவர்களிடமிருந்து விலகிச் சென்றபோது, 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சீனிவாசனை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சீனிவாசன் இது குறித்து F-5 சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சூளைமேடு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு, மேற்படி சீனிவாசனை கத்தியால் தாக்கிவிட்டு தலைமறைவான குற்றவாளிகள் வெற்றி கண்ணன், வ/34, த/பெ.பாலசுப்ரமணியன், எண்.18/23, காமராஜர் நகர் 3வது தெரு, சூளைமேடு மற்றும் கார்த்திக், வ/26, த/பெ.ராமன், எண்.215/17, கங்கையம்மன் கோயில் தெரு, சூளைமேடு, ஆகிய 2 பேரை 20.10.2018 அன்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மேற்படி வழக்கு தொடர்பாக வருகிற 19.9.2019 அன்று நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளதால், மேற்படி குற்றவாளிகள் வெற்றி கண்ணன் மற்றும் கார்த்திக் ஆகியோர் கடந்த 13.9.2019 அன்று இரவு சீனிவாசனை சந்தித்து, மேற்படி வழக்கில் நீ சாட்சியம் அளிக்க வரக் கூடாது, மீறி வந்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டுச் சென்றனர். இது தொடர்பாக சீனிவாசன் F-5 சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து, கொலை மிரட்டில் விடுத்த குற்றவாளிகளில் வெற்றி கண்ணன், வ/34, த/பெ.பாலசுப்ரமணியன், சூளைமேடு என்பவரை நேற்று (15.9.2019) கைது செய்தனர். தலைமறைவான கார்த்திக்கை காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட வெற்றி கண்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.