சிறுமியிடம் தவறாக நடந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000/- அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

0
31

கடந்த 04.11.2016 அன்று நந்தம்பாக்கம் பகுதியில் 12 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் று-31 புனித தோமையர் மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பாக புனித தோமையர்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளர், குற்றம் சாட்டப்பட்ட ஆல்பர்ட் என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர் சிறுமியிடம் தவறாக நடந்தது தெரியவந்தது.
அதன்பேரில், W-31 புனித தோமையர்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் POCSO Act -2012 (Protection of Children from Sexual Offences) சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி ஆல்பர்ட், வ/21 த/பெ.ராஜுவ், எண்.21, ஈஸ்வரன் கோயில் தெரு, நந்தம்பாக்கம், சென்னை என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி குற்றவாளி ஆல்பர்ட் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் று-31 புனித தோமையர்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தியும் வந்த நிலையில் விசாரணை முடிந்து நேற்று (09.7.2019) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில், குற்றவாளி ஆல்பர்ட் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25,000/- அபராதமும் விதித்து கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த W-31 புனித தோமையர்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here