சாஸ்திரி நகர் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பழைய குற்றவாளி கைது

0
393

சென்னை, பெசன்ட்நகர், கக்கன் காலனி, எண்.131 என்ற முகவரியில் வசிக்கும் நாகராஜ், 27, த/பெ. குமார் என்பவர் தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நாகராஜ் கடந்த 09.02.2020 அன்று மாலை சுமார் 06.15 மணியளவில், பெசன்ட்நகர், ஓடைக்குப்பம், வேளாங்கண்ணி கோயில் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த நபர் நாகராஜை மடக்கி, கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டினார். நாகராஜ் பணம் தர மறுக்கவே, அந்த நபர் நாகராஜை கையால் தாக்கி அவர் வைத்திருந்த பணம் ரூ.600/- ஐ பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து நாகராஜ் J-5 சாஸ்திரிநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட செல்வகுமார் (எ) வசந்த், வ/21, த/பெ.ராமச்சந்திரன், எண்.35, பைண்டியம்மன் கோயில் தெரு, ஓடைக்குப்பம், பெசன்ட்நகர், சென்னை என்பவரை நேற்று (10.02.2020) கைது செய்தனர். அவரிடமிருந்து கத்தி-1 பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் கைது செய்யப்பட்ட செல்வகுமார் (எ) வசந்த் மீது J-5 சாஸ்திரி நகர் மற்றும் J-6 திருவான்மியூர் காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட செல்வகுமார் (எ) வசந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பபட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here