சங்கர் நகர் பகுதியில் காரில் பெருமளவு குட்கா பாக்கெட்டுகள் கடத்திச் சென்ற தந்தை, மகன் கைது. 1,790 கிலோ எடை கொண்ட குட்கா பாக்கெட்டுகள், பணம் ரூ.2,37,464/- மற்றும் ஒரு கார் பறிமுதல்

0
335

சென்னையில் போதைப் பொருட்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா மற்றும் புகையிலை பொருட்களை வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, S-6 சங்கர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் இன்று (31.8.2019) காலை சுமார் 11.00 மணியளவில் அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த தகவலின்பேரில், காவல் குழுவினர் நாகல்கேணி, பெரியார் நகர், சோங்கிவேல் தெருவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் அப்போது, அவ்வழியே வந்த TN 85 J 0082 பதிவெண் கொண்ட மாருதி ஸ்விப்ட் காரை நிறுத்தியபோது, காரிலிருந்த ஒரு நபர் ஓடிவிடவே, காரில் இருந்த மற்ற 2 நபர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். மேலும், சந்தேகத்தின்பேரில், காரை சோதனை செய்தபோது, காரில் பெருமளவு குட்கா பாக்கெட்டுகளை மூட்டைகளில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், காரில் குட்கா பொருட்களை கடத்திச் சென்ற ராஜேந்திரன், வ/62, த/பெ.வடிவேல், எண்.5, சோங்குவேல் தெரு, பெரியார் நகர், நாகல்கேணி, பல்லாவரம் மற்றும் இவரது மகன் ராதாகிருஷ்ணன், வ/30, த/பெ.ராஜேந்திரன் (அதே முகவரி) ஆகிய 2 பேரை கைது செய்தனர். காவல் குழுவினர் கார் மற்றும் மேற்படி எதிரிகளின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,790 கிலோ எடை கொண்ட குட்கா பாக்கெட்டுகள், பணம் ரூ.2,37, 464/- மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய மேற்படி ஸ்விப்ட் கார் ஆகியவை பறிமுதல் செய்தனர். தப்பிச்சென்ற மகேந்திரன் என்பவரை பிடிக்க காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரும் இன்று (31.8.2019) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here