சங்கர் நகர் பகுதியில் உள்ள ICICI வங்கி ATM இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்த நபரை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்

0
843

கடந்த 22.10.2019 அன்று அதிகாலை சுமார் 02.10 மணியளவில் S-6 சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொழிச்சலூர் மெயின் ரோடு, பம்மல் கணேச மஹால் திருமண மண்டபம் அருகில் உள்ள ICICI வங்கி ATM இயந்திரத்தை ஒருவர் கையால் உடைப்பதை கண்காணித்த மும்பை ICICI வங்கி தலைமை அலுவலக ஊழியர் S-6 சங்கர் நகர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் சி.சி.டி.வி கேமராவில் பதிவான நபரின் உருவத்தை பணியில் இருந்த தலைமைக்காவலர் திரு.செர்லின் மார்வலின் WhatsApp எண்ணிற்கு அனுப்பியுள்ளர். உடனே தலைமைக்காவலர் செர்லின்மார்வல், சங்கர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. S.ஜேம்ஸ், சுற்று காவல் வாகன பணியில் இருந்த உதவி ஆய்வாளர் திரு.E.விநாயகமூர்த்தி, முதல் நிலைக்காவலர் திரு.B.சதிஷ்குமார், (மு.நி.கா.43118) பொழிச்சலூர் செக்டார் பணியிலிருந்த தலைமைக்காவலர் T.பால்துரை, (தா.கா.36569), FOP திரு.J.ஜெயபிரதாப், ஆகியோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். மேற்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது, அங்கு யாரும் இல்லாததால், சம்பவ இடத்தின் அருகில் உள்ள நேரு நகர், அம்மன் கோவில் தெருவில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் அருகில் படுத்திருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். மேலும் மும்பை ICICI வங்கி தலைமை அலுவலக ஊழியர் WhatsApp ல் அனுப்பிய புகைப்படத்தை ஒப்பிட்டு பார்த்த போது பிடிபட்ட நபரின் உருவம் ஒத்துபோனதால் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்த விசாரணை செய்தனர்.
S-6 சங்கர் நகர் காவல் நிலைய போலீசரின் விசாரணையில் பிடிபட்ட நபர் அருள்மணி வ/25, த/பெ.ஆறுமுகம், சிறுவத்தூர், உளுந்தூர்பேட்டை தாலுகா, விழுப்புரம் மாவட்டம் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட அருள்மணி குடிபோதையில் ஏம்.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயன்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அருள்மணி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
ATM இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்த நபரை சில மணி நேரத்திலேயே கைது செய்த சங்கர் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.S.ஜேம்ஸ், ரோந்து வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர் திரு.E.விநாயகமூர்த்தி, தலைமைக்காவலர் திரு.R.செர்லின்மார்வல் (த.கா.51782), முதல் நிலைக்காவலர் திரு.சதீஷ்குமார் (மு.நி.கா.43118) மற்றும் FOP திரு. J.ஜெயபிரதாப் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா. விசுவநாதன், இ.கா.ப அவர்கள் இன்று ( 25.10.2019) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here