சங்கர்நகர் பகுதியில் வீடு புகுந்து திருடிய நபர் கைது. 10 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

0
699

சென்னை, பம்மல், சங்கர் நகர் 4வது தெரு, எண்.8 என்ற முகவரியில் வசித்து வரும் பாலசந்திரன், வ/74, த/பெ.வெங்கட்ராமன் என்பவர் கடந்த 09.8.2019 அன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டு மறுநாள் (10.8.2019) வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் பீரோவில் வைத்திருந்த 4 சவரன் தங்கநகைகளை யாரோ திருடிச் சென்றுவிட்டிருந்தனர். இது குறித்து பாலசந்திரன் S-6 சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சங்கர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை ஆய்வு செய்தும், தீவிர விசாரணை செய்தும் மேற்படி வீட்டில் திருடிய குற்றவாளி கருப்பசாமி, வ/48, த/பெ.இசக்கிமுத்து, முத்தாரம்மன் கோயில் தெரு, சாத்தான்குளம், தூத்துக்குடி என்பவரை நேற்று (01.10.2019) கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடமிருந்து 10 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட குற்றவாளி கருப்பசாமி மீது கடந்த 28.2.2019 அன்று சங்கர்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனகாபுத்தூர், காமாட்சி நகரிலுள்ள பாஸ்கரன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் தங்க நகைகள் திருடிய வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here