கோயம்பேடு பகுதியில் செல்போன் பறித்த நபர் கைது.1 செல்போன் பறிமுதல்

0
140

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, மாப்பூடையூர் , தெற்கு தெரு, எண்.127 என்ற முகவரியில் வசிக்கும் குமார், வ/39, த/பெ. பொன்னுசாமி என்பவர் சென்னை கோயம்பேடு மார்கெட்டில் லோடுமேன் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று (12.03.2020) காலை சுமார் 5.00 மணியளவில் சென்னை, கோயம்பேடு காய்கறி மார்கெட் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த ஒருவர் மேற்படி குமாரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார். இத குறித்து குமார் கே-10 கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கே-10 கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை செய்து மேற்படி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சுரேஷ்பாபு, வ/42, த/பெ.வெங்கடேசன், எண்.206, மாதக்கோயில் தெரு, வளர்புரம் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சுரேஷ்பாபு விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here