கோபி நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் ரெய்டு

0
71

கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையாளர் திரு. தாணுமூர்த்தி அவர்களின் உத்தரவின்படி, துப்புரவு அலுவலர் பொறுப்பு செந்தில்குமார்,  துப்புரவு ஆய்வாளர்கள் கார்த்திக் தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் அருள், ஸ்ரீதர், கிருஷ்ணன்  மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர் சக்திவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  விற்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர். இதில் புகழேந்தி வீதி மற்றும் பெருமாள் கோவில் வீதியில் உள்ள  கடைகளில் பிளாஸ்டிக்  ரெய்டு நடத்தப்பட்டது.  இதில் ஒரு கடையில் இருந்து ஒரு டன் அளவில்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான கேரிபேக், பிளாஸ்டிக் ஸ்பூன்,  நான் ஓவன் பைய்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கடைக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மற்றொரு கடையில் பிளாஸ்டிக் ஸ்பூன் ஒரு மூட்டையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த கடைக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.  மற்றொரு கடையில் பிளாஸ்டிக் ஸ்ட்ராகள்  பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைக்கு  ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு இலட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூபாய் 32 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here