கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

0
134

சென்னை, வியாசர்பாடி, ரங்கநாதபுரம், என்ற முகவரியில் சீனிவாசன் (எ) நேரு, வ/24, என்பவர் வசித்து வந்தார். கடந்த 08.07.2017 அன்று முன்விரோதம் காரணமாக மேற்படி சீனிவாசன் (எ) நேரு கொலை செய்யப்பட்டார். இது குறித்து ஞ-3 வியாசர்பாடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தபட்ட சாம்சன், வ/32, த/பெ.மைக்கேல், வியாசர்பாடி, மார்ட்டின், வ/29, த/பெ.மைக்கேல், வியாசர்பாடி ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், 16வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் P-3 வியாசர்பாடி காவல் நிலைய ஆய்வாளரால் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும், விரைவாக சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கு விசாரணை முடிந்து கடந்த 20.01.2020 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சாம்சன், வ/32, த/பெ. மைக்கேல், எண்.10, ரங்கநாதபுரம், வியாசர்பாடி என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மற்றொரு குற்றவாளியான மார்டின் விடுதலை செய்யப்பட்டார்.

மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர் செய்தும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த P-3 வியாசர்பாடி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here