கொரோனா தடுப்பு – விழிப்புணர்வுப் பணிகள் குறித்து கழக நிர்வாகிகளிடம் கைபேசிக் காணொலி மூலம், மக்களின் குடும்ப உறுப்பினர்களாக உதவிகள் செய்ய மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

0
148

கொரோனா தடுப்பு – விழிப்புணர்வுப் பணிகள் குறித்து கழக நிர்வாகிகளிடம் கைபேசிக் காணொலி மூலம் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா நோய்ப் பரவலின் நிலை மற்றும் தடுப்புப் பணிகள் குறித்து, தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கைபேசி காணொலி மூலம் உரையாடிக் கேட்டறிந்தார். கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இதுகுறித்து அவர் முகநூலில் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம் வருமாறு:

முகநூல் பதிவு:

கொரோனா காலத்திலும் தொய்வில்லாது தொண்டாற்றுவோம்!

மக்கள் செயலாளர்களாக செயல்பட மாவட்டச் செயலாளர்களுக்கு

ஆலோசனை கூறினேன்!

கொரோனா காலத்தில் திமுக சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் குடும்ப உறுப்பினர்களாக உதவிகள் செய்ய வேண்டுகோள் விடுத்தேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here