குரோம்பேட்டையில் கஞ்சா வைத்திருந்த வடமாநில நபரை கைது செய்த உதவி ஆய்வாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்

0
266

S-13 குரோம்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.S.சந்திரன் அவர்கள் கடந்த 19.01.2020 அன்று இரவு பணியிலிருந்தபோது, நள்ளிரவு சுமார் 01.30 மணியளவில் (20.01.2020 அதிகாலை) குரோம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் (பல்லாவரம் நோக்கி செல்லும்) கண்காணிப்பு பணியிலிருந்தபோது, அங்கு வெகுநேரம் சந்தேகப்படும்படி நின்றிருந்த வடமாநில நபரை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். மேலும் சந்தேகம் அதிகரிக்கவே, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் பெருமளவு கஞ்சா இருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், உதவி ஆய்வாளர் S.சந்திரன், கஞ்சா வைத்திருந்த நபரை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர் சுன்ஷேங்லூங், வ/21, த/பெ. சம்தான்லூங், தமங்லாங் சப்டிவிஷன், மணிப்பூர் என்பதும், மணிப்பூரிலிருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. அதன்பேரில், குற்றவாளி சுன்ஷேங்லூங் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சுன்ஷேங்லூங் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

இரவு பணியின்போது விழிப்புடன் செயல்பட்டு கஞ்சா வைத்திருந்த குற்றவாளியை கைது செய்த S-13 குரோம்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.S.சந்திரனை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. அ. கா. விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று (22.01.2020) நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here