குமரன் நகர் பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது. இருசக்கர வாகனம் மற்றும் 455 கிராம வெள்ளி பொருட்கள் பறிமுதல்

0
357

சென்னை, மயிலாப்பூர், நல்லப்பன் தெருவில் வசிக்கும் அரிஹரன், வ/56, த/பெ.ஆறுமுகம் என்பவர் அவரது TN09 6988 என்ற பதிவெண் கொண்ட ஹோண்டா ஷைன் இருசக்கர வாகனத்தில் கடந்த 20.11.2019 அன்று குமரன் நகர், மேற்கு ஜோஸ் ரோட்டிலுள்ள ஒரு கடைக்குள் சென்று விட்டு திரும்ப வந்து பார்த்தபோது, அவர் கடை வாசலில் நிறுத்தியிருந்த மேற்படி இருசக்கர வாகனத்தை யாரோ திருடிச் சென்று விட்டிருந்தனர். இது குறித்து அரிஹரன் R-6 குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
குமரன் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் சம்பவ இடத்தில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி இருசக்கர வாகனத்தை திருடிய குற்றவாளிகள் சதிஷ் (எ) கிட்டா, வ/30, த/பெ.பாரதி, எண்.16 புளியூர்புரம் 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் இருசக்கர வாகனம் மற்றும் 455 கிராம் எடை கொண்ட வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட சதிஷ் (எ) கிட்டா மீது R-2 கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சதிஷ் (எ) கிட்டா, விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here