குன்றத்தூரில் முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து பொருட்களை தீயிட்டு கொளுத்திய மாநகர பேருந்து ஓட்டுநர் கைது

0
666

சென்னை, குன்றத்தூர், கெளுத்திப்பேட்டை, காந்தி தெரு, எண்.7/90 என்ற முகவரியில் சந்தியா, பெ/வ.25, க/பெ.கிரிராஜ் (லேட்) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில், கெளுத்திப்பேட்டை, நல்வாழ்வு நகரில் வசித்து வரும் செல்வகுமார், வ/38, த/பெ.சிவராஜ் என்பவர் தாம்பரம் பேருந்து பணிமனையில் மாநகர பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 18.10.2019 அன்று மதியம் செல்வகுமார் சந்தியாவின் வீட்டிற்குள் நுழைந்து வீட்டிலிருந்து துணிகள், டேபிள் பேன் மற்றும் எலக்டிரானிக் பொருட்களை எடுத்து வந்து வெளியில் போட்டு தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பிச் சென்றார். இது குறித்து சந்தியா, T-13 குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குன்றத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து, மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவான செல்வகுமார், வ/38, த/பெ.சிவராஜ், எண்.3/230, அம்பேத்கர் தெரு, நல்வாழ்வு நகர், கெளுத்திபேட்டை, குன்றத்தூர், சென்னை என்பவரை நேற்று (19.10.2019) கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கடந்த 2018ம் ஆண்டு சந்தியாவின் கணவர் கிரிராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டதால் பழிவாங்கும் நோக்கத்தில், சந்தியா மற்றும் கிரிராஜ் தரப்பினர் எதிரி செல்வகுமாரின் மைத்துனர் போகபதிபாபு என்பவரை கொலை செய்துள்ளனர். இந்த முன்விரோதம் காரணமாக செல்வகுமார், சம்பவத்தன்று சந்தியாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை எரித்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட செல்வகுமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here