குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகதீர்மானம்| சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

0
521

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரக் கோரி சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று, குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என திமுக வலியுறுத்தியது. திமுகவின் கோரிக்கை ஆய்வில் இருப்பதால் உடனடியாக அதை நிறைவேற்ற முடியாது என சபாநாயகர் தனபால் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர அதிமுக அரசு அஞ்சுவதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here