குடிபோதையில் தகராறு செய்து கத்தி மற்றும் கட்டையால் தாக்கிய 2 பேர் கைது. கத்தி -1 பறிமுதல்

0
250

சென்னை, திருவொற்றியூர், டாப்டர் அம்பேத்கர் நகர், விநாயகர் கோயில் தெரு, எண்.209/21 என்ற முகவரியில் வசித்து வரும் முருகன், வ/50, த/பெ. வேலுசாமி என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 28.02.2020 அன்று இரவு சுமார் 10.00 மணியளவில், மேற்படி முருகனின் வீட்டு வாசலில் 2 பேர் ஆட்டோவை நிறுத்தி மது அருந்திக் கொண்டிருந்தபோது, முருகன் மேற்படி 2 நபர்களிடம் ஆட்டோவை எடுத்து செல்லுமாறு கூறியுள்ளார். உடனே, 2 பேரும் குடிபோதையில் முருகனை கத்தி மற்றும் கட்டையால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். முருகனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து முருகனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததன்பேரில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், இது தொடர்பாக M-8 சாத்தங்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து, மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்ற எதிரிகள் 1.பிரவீன் (எ) பிரவீன்குமார், வ/22, த/பெ.கோடீஸ்வரன், எண்.203, விநாயகர் கோயில் தெரு, திருவொற்றியூர், 2.கார்த்திக், வ/25, த/பெ.சேகர், எண்.எ.2/252, விநாயகர் கோயில் தெரு, திருவொற்றியூர், சென்னை ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மேற்படி குற்றச் செயலுக்கு பயன்படுத்திய கத்தி-1 பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here