கிண்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த பார் ஊழியர் நபர் கைது. 21 மதுபாட்டில்கள் பறிமுதல்

0
307

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் காவல் குழுவினர் அவர்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, J-3 கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் இன்று (01.02.2020) அதிகாலை பணியிலிருந்த போது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கிண்டி, சின்னமலை, டாஸ்மாக் கடை அருகில் ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு ஒரு நபர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், மேற்படி இடத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த வினோத், வ/27, த/பெ.சேகர், பெரிய முப்பையர் கிராமம், தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 180 மி.லி. அளவுகொண்ட 21 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட வினோத் என்பவர் மேற்படி டாஸ்மாக் கடை பாரில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here