காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தி வீரவணக்க நாள் அனுசரிப்பு

0
532

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் Hot Springs என்ற இடத்தில் சீன இராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி ‘காவலர் வீரவணக்க நாள்’ (Police Commemoration Day) அனுசரிக்கப்படுகிறது.

இன்று (21.10.2019) சென்னை காமராஜர் சாலையிலுள்ள தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் காவலர் வீரவணக்க நாள் (Police Commemoration Day)அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கடந்த 01.09.2018 முதல் 31.08.2019 முடிய ஓராண்டு காலத்தில் இந்தியா முழுவதும் பணியின் போது வீரமரணமடைந்த 292 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.ஜ.கு.திரிபாதி, இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, திரு.ஆ.மு.நாராயணன், இ.கா.ப, (ஓய்வு) Former National Security Advisor,  Rear Admiral K.J.குமார் , VSM, Flag Officer TamilNadu & Pudhucherry, திரு.S.பரமேஸ், PTM., TM., Inspector General, Coast Guard Region (East), Chennai, திரு.விஜயநாராயணன், Advocate General of TamilNadu, முனைவர் திரு.செ.கி.காந்திராஜன், இ.கா.ப, இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, திரு.ஹரிசேனாவர்மா, இ.கா.ப, Special Director, SIB., முனைவர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப, சென்னை பெருநகர காவல் ஆணையாளர், திரு. G .பிரகாஷ், இ.ஆ.ப, ஆணையாளர், சென்னை மாநகராட்சி, திருமதி. R.சீத்தாலஷ்மி, இ.ஆ.ப, சென்னை ஆட்சியர், துறை தலைவர்கள் மற்றும் முன்னாள் காவல் துறை இயக்குநர்கள் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள், அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர்.

காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சிக்கு வீரமரணமடைந்த காவல் ஆய்வாளர் திரு. S. பெரியபாண்டியன் அவர்களின் மகன் திரு. P .ரூபன் பிரியராஜ், உட்பட வீர மரணம் அடைந்த காவலர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

காவல்துறை தலைமை இயக்குநர் திரு.ஜ.கு. திரிபாதி, இ.கா.ப., அவர்கள் ஆற்றிய உரையில் கடந்த ஆண்டில் இந்தியாவில் பல பகுதிகளில் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது உயிரிழந்த காவலர்களின் பெயர்களை நினைவு கூர்ந்தார். பின்னர் துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரமணமடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், ஓய்வு பெற்ற காவல் உயரதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here