காவல்துறை இயக்குநர் முனைவர் C.K.காந்திராஜன், இ.கா.ப., அவர்கள் பணி ஓய்வு பெறுவதையொட்டி பிரிவு உபச்சார விழா நடைபெற்றது

0
697

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ( Fire and Rescue Services ) காவல் துறை இயக்குநர் முனைவர் C.K.காந்திராஜன், இ.கா.ப., அவர்கள் இன்று (31.10.2019) பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் காவல் துறை சார்பில் அளிக்கப்பட்ட சிறப்புக் கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும், காவல் துறை தலைமை இயக்குநர் திரு.ஜெ.கே.திரிபாதி, இ.கா.ப., அவர்கள் காவல் துறை இயக்குநர் முனைவர் C.K.காந்திராஜன், இ.கா.ப., அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காவல் துறை இயக்குநர்கள் திரு.எம்.எஸ்.ஜாபர்சேட், இ.கா.ப, (CBCID) திரு.சி.சைலேந்திரபாபு, இ.கா.ப ( Railway) திரு.கரண்சின்கா, இ.கா.ப. (Training) திரு.பிரதீப் வி பிலிப், இ.கா.ப, (CSCID), திரு.விஜயகுமார், இ.கா.ப (V & AC), சென்னை பெருநகர காவல் ஆணையாளர், திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., காவல் துறை கூடுதல் இயக்குநர் (L & O) திரு.கே.ஜெயந்த்முரளி, இ.கா.ப, உயர் காவல் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here