கானத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது. 100 கிராம் கஞ்சா பறிமுதல்

0
182

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து, அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக J-12 கானத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (3.12.2019) ரோந்து பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், பனையூர், பள்ளிக்கூட தெரு, கெனால் அருகில் கண்காணித்தபோது, அங்கு ஒருவர் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், மேற்படி இடத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சௌந்தர்ராஜன் (எ) டோட்டல், வ/20, த/பெ.வரதராஜன், எண்.2/1429, கற்பக விநாயகர் 11வது குறுக்கு தெரு, வெட்டுவாங்கேணி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட சௌந்தர்ராஜன் (எ) டோட்டல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here