காதலிப்பதாக கூறி தகாத முறையில் நடந்து கொண்ட பின் திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது

0
934

சென்னையைச் சேர்ந்த வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பெ/வ.23 என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சென்னை, வடபழனியைச் சேர்ந்த ஜீவன்ஜோதி, ஆ/வ.27, த/பெ.ஆதாம் என்பவர் சென்னையிலுள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். ஜீவன்ஜோதி மற்றும் வனிதா ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு முகநூல் மூலம் அறிமுகமாகி பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். மேலும், இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்த நிலையில், ஜீவன்ஜோதி, வனிதாவிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வனிதாவிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். பின்னர் ஜீவன்ஜோதி, வனிதாவிடம் பேசுவதை தவிர்த்து வந்த நிலையில், ஜீவன்ஜோதிக்கு வேறிடத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் நடைபெற உள்ளது வனிதாவுக்கு தெரியவந்தது.
உடனே, வனிதா இது பற்றி ஜீவன்ஜோதியிடம் கேட்டபோது, ஜீவன்ஜோதி தகாத வார்த்தைகளால் பேசி, வனிதாவை மிரட்டியுள்ளார். பின்னர் வனிதா, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தகாத முறையில் நடந்து கொண்டு திருமணம் செய்ய மறுத்ததாக ஜீவன்ஜோதி மீது W-30 பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஜீவன்ஜோதியை அழைத்து விசாரணை செய்தனர். விசாரணையில், வனிதா கொடுத்த புகார் உண்மையென தெரியவந்ததன் பேரில், எதிரி ஜீவன்ஜோதி, வ/27, த/பெ.ஆதாம், எண்.11, மெட்ரோ பிளாட்ஸ், பஜனை கோயில் தெரு, வடபழனி, சென்னை என்பவரை நேற்று (28.8.2019) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜீவன்ஜோதி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here