“கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி

0
306

அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவரும், முன்னாள் சென்னை மாநகர மேயர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர். பாவலர் திரு. வை. பாலசுந்தரம் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனையுற்றேன்.

அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பட்டியலின – பழங்குடியின மக்களின் பாதுகாவலராக மும்முரமாகப் பணியாற்றி – சென்னை மாநகராட்சியிலும், தமிழக சட்டமன்றத்திலும் அவர்களின் உரிமைகளுக்காகவும், சமூகநீதி மற்றும் சமத்துவத்திற்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடியதோடு அவற்றை நிறைவேற்றவும் பாடுபட்டவர்.

முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்கள் மீது மாறாப் பற்று வைத்திருந்தவர்.

டாக்டர் திரு. வை. பாலசுந்தரம் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here